(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் நூற்று ஒரு வயதுடைய மூதாட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவர் ஏறாவூர் – ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த பத்துப்பிள்ளைகளின் தாயான சாலித்தம்பி வெள்ளையும்மா என்பவராவார்.
மரியாதைக்குரிய எமது முதியோர்கள் எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் முதியோர்கள் அன்பளிப்பு வழங் கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் எஸ்எச்.முஸம்மில் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் எம்எச். அப்துல்லாஹ், கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளரும் காணி , விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அமைச்சின் மாகாண இணைப்பாளருமான கே. திலகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





