நாளை சம்மாந்துறையில் சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா!

( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை ஓய்வூதியர் நலன்புரி சமூக சேவை சபையின் சர்வதேச முதியோர் சிறுவர் தின கொண்டாட்ட விழா நாளை(01) புதன்கிழமை சம்மாந்துறை மல்கம்பிட்டி பள்ளிவாசல் முன்றலில் நடைபெற இருக்கிறது .

ஓய்வூதிய சபையின் தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐ.எம். இப்ராஹிம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது .

90 வயதுக்கு மேற்பட்ட மூன்று வயோதிபர்கள் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஓய்வூதியர்களின் நான்கு பேரப்பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள்.

மேலும் பல கொண்ட நிகழ்வு நடைபெறும் என்று சபையின் செயலாளரும் ஓய்வு பெற்ற சிறுவர் நன்நடத்தை அதிகாரியுமான எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.