நூற்றுக் கணக்கான தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

கொட்டாவை பகுதியில் பல்வேறு வகையான 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்புடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 30 போலி வாகன இலக்கத்தகடுகள், 15 வாகன வருமான உத்தரவு பத்திரங்கள், 15 காப்பீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.