மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் திலீபனின் 38வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றையதினம் (26) மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட்குணபாலனின் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.