இலங்கைத் தமிழரசு மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற புச்சாக்கேணி சமர் விளையாட்டு நிகழ்வு…

புச்சாக்கேணி அகரமுதல்வன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புச்சாக்கேணி பிரதேச கழகங்களுக்கிடையிலான கேணியூர் சமர் எனும் விளையாட்டு நிகழ்வின் இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு நிகழ்வும் இன்றைய தினம் புச்சாகேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அகரமுதல்வன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் இ.உருத்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த புச்சாக்கேணி சமரில் இடம்பெற்ற எல்லே, கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்ட போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.