வாஸ் கூஞ்ஞ
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கில் மறைக்கல்வி வாரத்தின் இறுதிநாளில் திருப்பலியுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கத்தோலிக்க திருஅவையானது இவ்வருடம் செப்படம்பர் மாதம் 14 ந் திகதி தொடக்கம் 21ந் திகதி வரை தங்கள் பங்குகளில் மறைக்கல்வி வாரத்தை கொண்டாடியது
இதற்கமைய மன்னார் மறைமாவட்டத்தில் அதிகமான பங்குகளில் மறைவாழ்வுப் பணியாளர்களின் ஏற்பாட்டில் ஆலயங்களில்; பங்குத் தந்தையர்களால் மறைக்கல்வி கொடி ஏற்றப்பட்டு காலைத் திருப்பலியுடன் இவ்வாரம் அனுஷ்க்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்டத்தில் இவ் மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு பங்குகளும் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப மறைக்கல்விப் போட்டிகள் – மறைக்கல்வி சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மறைவாழ்வுப் பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகள் நடாத்தப்பட்டு இறுதி நாளாகிய் ஞாயிற்றுக் கிழமை (21.09) காலை திருவிழா திருப்பலிகள் பங்குகளில் இடம்பெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதிகமான பங்குகள் முன்னெடுத்து இருந்தன.
இதற்கமைய பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கில் இவ் மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு இறுதிநாள் பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளார் திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுப்பதையும் மறைபணியாளர்கள் தங்கள் வாக்குத்தத்தை புதுப்பித்துக் கொள்வதையும் பங்குபற்றியுள்ள மறைக்கல்வி மாணவர்களையும் படங்களில் காணலாம்.



