வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா

ருத்திரன்.
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா பாலர் பாடசாலை பெற்றோர் சங்க தலைவர் அ.மோகனராஜ் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள்,உடற்பயிற்சிக் கண்காட்சி,வினோத உடைப் போட்டி,பெற்றோர் விளையாட்டு,இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பிரத அதிதிகளாக திருமதி ஜெயானந்தி அருள்செல்வம்,உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன் கலந்து கொண்டனர்.கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.யோகநாதன் மற்றும் திருமதி டிலுஜா மனோராஜ் கலந்து கொண்டனர்.விசேட அதிதிகளாக சமூகசேவை உத்தியோகத்தர் ச.ஜெயசேகர், பாலர் பாடசாலை வெளிகள இணைப்பாளர் திருமதி கயல்விழி வினோதரன்,மற்றும் திட்ட இணைப்பாளர் த.றொசாந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.