தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19.09.2025) காலை போலீசாரால் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு, வந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் திருக்கோணமலை பிரதான போலீஸ் நிலைய போலீஸ் அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.


