திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமாரவின் நெறியாழ்கையின் கீழ் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன உட்பட மாகாண பிரதம செயலாளர்,உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான எதிர் கால நடவடிக்கைகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு உட்கட்டமைப்பு சுகாதாரம் கல்வி மேம்பாடு தொடர்பிலும் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


