(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சுமார் ஒரு வருட காலமாக பெண்களுக்கான பயிற்சி நிலையமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக பயிற்சி நிலையம் Panda training (Pvt) Ltd இன் ஒரு வருட நிறைவு விழா கல்முனை Panda training (Pvt) Ltd வளாகத்தில் (13) இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர்களான ஹேமந்த சபுமோஹொட்டி, அர்ஷாத் பாரூக், முகம்மது பனூர், பிரதீப் ஜயசுந்தர, கல்முனை பிரதேச செயலாளர் அன்ஸார், மயோன் குரூப் நிறுவனம் சார்பாக அதன் பணிப்பாளர், ALFEA நிறைவேற்று சபை உறுப்பினர் எம்.றிஸ்லி முஸ்தபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாறை மாவட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள், அம்பாறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


