எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது.
தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்களை தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சியினால் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் அறியும் உரிமையின் பொறுப்புக்கள் தொடர்பான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டதுடன் மக்களுக்கு தகவல்களை வழங்கும் பொறுப்பு தொடர்பான முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற முதல்வர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,
பெப்ரல் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சுஜிவகஜநாத், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



