இலங்கை இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் உருவாக்கப்போவதாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் அறிவிப்பு பற்றி ரவூப் ஹக்கீமோ, ரிசாத் பதியுதீனோ எத்தகைய கண்டனத்தையும் வெளியிடவில்லை.
இது விடயத்தை எமது ஐக்கிய காங்கிரஸ் உட்பட பல முஸ்லிம் பொது மக்கள் கண்டனம் வெளியிட்டதால் பா.உ. சுஜீவ சேனாநாயக்க இப்போது தனது முயற்சியை கைவிட்டதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் என்பது பெண்களையும் குழந்தைகளையும் அப்பாவி ஆண்களையும் படுகொலை செய்யும் ஒருபயங்கரவாத நாடு என்பது பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனாநாயக்கவுக்கு தெரியாதா?
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பல்ஸ்தீனுக்கு முழு ஆதரவாக இருந்ததால் பலஸ்தீனில் அவரது பெயரில் வீதி ஒன்றுக்கு கூட அம்மக்கள் பெயர் வைத்தனர்.
ஆனால் சஜித் பிரேமதாசவின் கட்சியினர் இஸ்ரேலுக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்கும் பாலம் போட முயற்சிக்கின்றனர். இதன் மூலம் பலஸ்தீன் விடயத்தின் தனது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாதவர்களாக சஜித் கட்சியினர் உள்ளனர்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது இஸ்ரேலுடன் இந்தளவு நட்பு என்றால் ஆளும் கட்சியாக வந்தாக் என்ன நிலை?
ஆகவே சஜபவுடன் கூட்டிணைந்து கொஞ்சிக்கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், முஜிபுர்ரஹ்மான் போன்றோர் உடனடியாக அக்கட்சி ஆதரவில் இருந்து வெளியேற வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ்


