மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைத்தல் திட்டத்திற்கு இணையாக பிரதேச செயலக மட்டத்தில் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் nerru nerru (09.09.2025) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை உருவாக்கப்படுவதன் நோக்கம், செயற்பாடுகள், செயற்பாட்டு திட்டங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பாக சிறு தொழில் முயற்சி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தரால் விளக்கமளிக்கப்பட்ட்து.

இதன் போது பிரதேச செயலகத்தில் கைத்தொழில் தொடர்பாக பணிபுரியும் தேசிய தொழில்முயற்சி அதிகார சபை, சிறு தொழில் முயற்சி பிரிவு, ஏற்றுமதி அதிகார சபை, சமுர்த்தி, கிராம அபிவிருத்தி பிரிவு மற்றும் விதாதா பிரிவுகளினுடாக பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக அதன் உத்தியோகத்தர்களினால் தெளிவூட்டப்பட்டது.

மேலும் பிரதேச மட்டத்தில் பணிபுரியும் வங்கிகள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் பிரதிநிதிகளால் தொழில்முயற்சியாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களும், எதிர்கால திட்டங்களும் பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், திணைக்களங்களின் பிரதிநிதிகள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.