பூப்பந்தாட்ட சங்மானது இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்மானது இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (08) இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ.பேராசிரியர்.ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசா
ங்க அதிபர் திருமதி.
ஜஸ்டினா முரளிதரன் இருவரினது அங்கிகாரத்துடன் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஓர் இணை சங்கமாகவே செயற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூப்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதற்கும் அவர்களுக்கு தேவையான விடயங்களை துரிதமாக மேம்படுத்துவதற்கும் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இடம் பெற்றது.

கடந்த காலங்களில் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தினால் கிடைக்கின்ற உதவிகள் முறையாக கிடைக்கப்பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டமையால் மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கான பயிற்ச்சிகள், சுற்றுப்போட்டிகள் போன்றவற்றை சுயமாக எமது சங்கத்தினால் மேற்க்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான சூழ்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது நேரடியாக இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்துடன் இணைவதென தீர்மானித்து விதிகளுக்கு அமைவாக விண்ணப்பித்திருந்தனர்.

இம்முயற்ச்சியானது இன்று இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்தின் தலைவர் தேசவந்து ரொசான் குணவர்த்தன மற்றும் பொது செயலாளர் திரு.அஜீத் விஜேயசிங்க மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி . நவருபரஞ்சினி முகுந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்திற்கான பதிவானது இடம் பெற்றது.

இனிவரும் காலங்களில் மட்டக்கப்பு மாவட்ட சங்கமானது நேரடியாக இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.