குண்டெறிதலில் அல்-ஜலால் மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியின் மெய்வல்லுனர் போட்டியானது (05) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியின் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் தரம் 8 மாணவன் ஜே.எம். ஜினாஸ் 11.69 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்துடன் முதலாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாடசாலை அதிபர் ரீ.கே.எம். சிராஜின் வழிகாட்டலில் இவருக்காக பயிற்சியளித்த பாடசாலை விளையாட்டுப்பாட ஆசிரியர்களான எம்.ஐ.எம். றிபான் மற்றும் திருமதி. ஜே. யாசிர் ஆகியோருக்கும் விசேடமாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அலி சாதிக் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, சாதனை படைத்த மாணவனுக்கும் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்கள் சார்பாக பாடசாலை சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.