வெருகல் பிரதேச சபையை வருமானமீட்டும் சபையாக மாற்ற கலந்துரையாடல்!

ஹஸ்பர் ஏ.எச்_

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று (03) வெருகல் பிரதேச சபைக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

வெருகல் பிரதேச சபை மேற்கொள்ள உள்ள அபிவிருத்தி திட்டங்கள், சபைக்கு வருமானம் ஈட்டும் வழிமுறைகள்,வெருகல் பிரதேச சபை பிரிவில் காணப்படும் சிக்கல்கள் குறித்து தவிசாளர் சேதுராமண் கருணாநிதி தலைமையிலான சபை உறுப்பினர்ளோடு கலந்துரையாடினார்.