எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அரசாங்க பொது நிர்வாக சுற்றறிக்கை 22/2025 இதற்கமைவாக Clean srilanka தேசிய வேலைத் திட்டத்திற்கு இணையாக அனைத்து அரசாங்க நிறுவனங்களில் செப்டம்பர் 01-04 வரை செயிரி வாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி .நிஹாறா மௌஜுத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எம். எஸ் .சில்மியா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அரசாங்க நிறுவனங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் தமது கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் நிறைவேற்றுவதற்கு உகந்த வகையில் சுத்தமானதும் சுகாதார பாதுகாப்பு உள்ளதுமான ஆபத்துக்கள் இல்லாத சுற்றுச் சூழலை உருவாக்கும் நோக்குடன் செயிரி வார செயற்பாடுகளாக தேவையற்றதை அகற்றுதல் மற்றும் சிரமதானம் போன்ற செயற்பாடுகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


