(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில், பொத்துவில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் மற்றும் பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம் & NCJP என்பன இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பொத்துவில் சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் தலைவரும் NCJP Mamber & மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகருமான எம்.எஸ்.அப்துல் மலிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
குறித்த ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.அஷ்ரப் குறித்த இரத்ததான நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வருடாவருடம் இரத்ததான நிகழ்வுகளை பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்தி வருன்றமை குறிப்பிடத்தக்கது.


