மன்னாரில் மிக சிறப்பாக நடந்தேறிய பண்பாட்டுப் பெருவிழா

( வாஸ் கூஞ்ஞ)

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மிக சிறப்பாக மன்னாரில் நடைபெற்றது.

2025ம் ஆண்டுக்கான இப்பெருவிழா வியாழக்கிழமை (28.08.2025) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றது.

இப் பெருவிழானாது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் கலஞ்சர்களின் கலை ஊர்வலத்துடன் ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக மாவட்ட செயலக பிரதான வாயிலில் இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் உயர் திரு. ந.வேதநாயகம் அவர்களுடன் நகர மண்டபத்தை வந்தடைந்ததை அடுத்து நிகழ்வுகள் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் மன்னார் மறை மாவட்டம் குருமுதல்வர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்- மன்னார் இந்துமத பீடம் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள்- மன்னார் ஜம்மிய்யதுல் உலமா சபை  தலைவர் மெளலவி அஷ் ஷெஸ்க் எம்.ஏ.சீ.எம.அஸ்லம் ஆகியோர்  திருமுன்னிலை ஆகியிருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களhக வடக்கு மாகாணம் பண்பாட்டலுவல்கள் அலகு பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி லாகினி நிருபராஜ் அவர்கள் மன்னார் சிரேஷ்ட பிரபல சட்டத்தரணி ஜனாப் மு.மு சபுறுதீன் அவர்கள்

கௌரவ விருந்தினர்களhக மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. கு. செல்வன் அவர்கள் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருவாட்டி அ.கி. வொலன்ரைன் இவர்களுடன்

கலை விருந்தினர் அதிதிகளாக மன்கலைச்சுரபி ஜனாப் ஜமால்தீன் முகம்மது முத்தலிபாவா (முசலி) செழுங்கலை வித்தகர் கஸ்பார் ஜேம்ஸ் (நானாட்டான்) மன்கலைச்சுரபி திருமதி. பராசக்தி விசுவாசம் (மாந்தை மேற்கு) மன்கலைச்சுரவி திரு. ஜெகநாதி சிவசம்பு (மடு) கலாபூசணம் செபமாலை அந்தோனிப்பிள்ளை (மன்னார் நகரம்)

மேலும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் அலுவலர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்ச்சிகளில் மாவட்ட கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின்போது மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் ‘மன்இளங்கலைச்சுடர்’ ‘மன்கலைத்தென்றல்’ ‘மன்கலைசுரபி’ என ஒவ்வொன்றுக்கும் தலா ஐந்து கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் வருடந்தோறும் இவ்வாறான மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா விழாவில் வெளியீடு செய்யப்படும் ‘மன்னெழில்’ என்ற மூன்றாவது புத்தக வெளியீடும் அரச அதிபர் க.கனகேஸ்வரன் வடக்கு மாகாணா ஆளுநர் நா.வேதநாயகம் அவர்களிடம் முதல் புத்தகத்தை வழங்கி வைக்க ஆளுநர் ஏனைய முக்கியஸ்தர்களுக்கு இவ் நூலை வழங்கி வைத்தார்.

இதற்கான சகல ஒழுங்கமைப்புக்களையும் மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் இ.நித்தியானந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.