மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை வழிபாடுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் விசேட சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று மாலை இடம் பெற்றது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் பஜனை, விநாயகர் அகவல் பாராயணம் மற்றும் ஆரத்தி என்பன இடம்பெற்றது.

குறித்த பூசை வழிபாடுகளில் சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், களி மண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையானது நாளைய தினம் சமுத்திரத்தில் கரைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.