எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.சுல்பிகா அபூபக்கர் தலைமையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் ஆனது சுமார் 40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.
இதில் ஊழியர்களுக்கான விடுதி வசதிகளும் உள்ளடங்குகின்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் அப்துல்லா கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக விவசாய அமைச்சின் செயலாளர் அஸ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டடத்திற்கான அடிக்கலினை நாட்டி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.ஹதி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்தியர்கள் அலுவலக ஊழியர்கள் பண்ணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த இந்த கட்டிட நிர்மாணமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தற்போது நிறுவப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைகள் அமைச்சின் மாவட்ட இணைப்பாளருமான கே.திலகநாதன் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன் அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.


