பாறுக் ஷிஹான்-
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் (UDA) சட்ட அமுலாக்கம், சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளல் மற்றும் திட்டமிடல் , அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வியாழக்கிழமை (21) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
இதன் போது அம்பாறை மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட 13 உள்ளூராட்சி நிறுவனங்களின் கெளரவ தவிசாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், சபைகளின் செயலாளர்கள், கெளரவ உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விடய உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதனை அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகமும் இணைந்து நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


