திஸ்ஸ வித்தியாலயத்திற்கு ரூ.28 மில்லியன் மதிப்புள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம்

ஹஸ்பர் ஏ.எச்_

கிழக்கு மாகாண நிதியிலிருந்து ரூ.28 மில்லியன் செலவில் திருகோணமலை திஸ்ஸ வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (19) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.