ஹஸ்பர் ஏ.எச்
தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை பொதுமக்களுக்கான தொற்றா நோய் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு கப்பல்துறை வைத்தியசாலை மருத்துவர்களினால் இன்று (2025.08.19 )
வழங்கப்பட்டது .தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில்
இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, BMI உடற்பருமண் போன்ற
பரிசோதனையும் இடம்பெற்று இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டன. இதில் ஆயுர்வேத மாகாண ஆணையாளரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


