(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதி (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஒலுவில், பாலமுனை மற்றும் காரைதீவு போன்ற பிரதேசங்களில் நீண்ட காலம் புனரமைக்கப்படாத வீதிகள் இத்திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வு, இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இதன்போது பிரதேசசெயலாளர்கள், உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் ஒலுவில் – மகாபோல வீதி, பாலமுனை – ஐஸ் மோல் மேற்கு வீதி, காரைதீவு- 11 வைத்தியசாலை வீதி, காரைதீவு வீ.சி. மூன்றாம் குறுக்கு வீதி ஆகிய வீதிகள் கொங்கிரீட் இட்டு புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


