துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்

எஸ்.சபேசன்

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் சா.கிருபைராசா தலைமையில் (16.08.2025) சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ் விழாவின் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்த பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் மற்றும் விஷேட அதிதிகளான பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பு.திவிதரன் ஆர்.ஜீவானந்தராஜா,எஸ்.சுரேஸ் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலையின் பழையமாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்காவை முதன்மை அதிதியான பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.

பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய கல்விச் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக்கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகள் மற்றும் பூங்கா அமைப்பதற்கு நிதி அனுசரணை வழங்கிவைத்த ரமேஸ் அவர்களை பாடசாலையின் பழைய மாணவர்கள் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.