(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவ தீர்த்தோற்சவம் அலங்கார காவடிகளுடன் ஊர்வலமாகச் சென்று நேற்று (9) சனிக்கிழமை காரைதீவுக் கடலில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இம் மகோற்சவம் தினமும் பகல் இரவு திருவிழாவாக வசந்தமண்டப பூஜையும் சுவாமி உள்வீதி வெளிவீதி வருதலும் இடம்பெற்று வந்தது.
உற்சவகால ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் திரு விழாக்கள் சொற்பொழிவுகள் தேரோட்டம் சகிதம் சிறப்பாக நடைபெற்று வந்தன.
சனிக்கிழமையன்று வள்ளிதெய்வானை சமேத முருகப் பெருமான் அண்ணன் விநாயகப் பெருமான் காவடி சகிதம் ஊர்வலமாக வந்து சமுத்திர தீர்த்தம் இடம் பெற்றது.
பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்திலும் தீர்த்தோற்சவத்திலும் கலந்து கொண்டனர்.


