எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து கலைகலாச்சார குழுவின் ஏற்பாட்டிலும் குழுத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தயாளராசா தரணிராஜ் அவர்களின் தலைமையிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் 2025.08.08 அன்று கல்லடி கடற்கரையில் இந் நிகழ்வானது இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதி முதல்வர் வை.டினேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந் நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும்
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர், மாநகர சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


