சிறப்புற்றார் “வாழும் வசந்தனால்” தா.சிதம்பரப்பிள்ளை.

0-4096x2304-0-0#

(எருவில் துசி) மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்த “வாழும் வசந்தன்” நூல்வெளியீட்டுவிழா 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02மணிக்கு மகிழடித்தீவு பிரதேச கலாச்சார மண்டபத்தில் தா.சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

அதிபர் வ.துசாந்தனின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமான  நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் சு.சிவரெத்தினம், தேசிய கல்விநிறுவக தமிழ்பிரிவுப்பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி ஆகியோரும் ,சிறப்பு அதிதிகளாக கிழக்குப்பல்கரலக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்க.மோகனதாசன் செங்கதிரோன் எந்திரி த.கோபாலகிருஸ்ணன் (தலைவர் கண்ணகி கலை இலக்கியக்கூடல்) ஆகியோர்  கலந்துகொண்டனர்.

நூல் அறிமுகவுரையினை சின்னத்தம்பி குருபரன் நி கழ்த்தினார் பிள்ளையார் வசந்தன், முசுற்றுவசந்தன், கூவாய் குயில் வந்தன், அனுமார் வசந்தன் போன்ற வசந்தன்களும் ஆடல்நிகழ்வாக இடம்பெறது.

முதற்பிரதியினை முன்னாள் கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரம் பெற்றார். இந்நிகழ்வில் வசந்தன் கலைச்செம்மல் பாலிப்போடி நல்லதம்பி விசேட கௌரவத்தினையும் பெற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு புத்திஜீவிகளும் கலைஞர்களும் கலந்து கொண்டதோடு வாழும் வசந்தன் நூலினை வெளியிட்ட தா. சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு பிரதேசத்தில் உள்ள அமைப்புக்கள் ஒன்றிணைந்து கௌரவித்ததோடு சங்கே முழங்கு அமைப்பும் கௌரவத்தினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அரங்கேற்றப்பட்ட வசந்தன் கூத்து ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு தமிழர் பாரம்பரிய கலை வடிவங்களில் இவ்வாறான சிறப்பான கலை வடிவங்களை எதிர்கால சந்ததியினருக்கு நாம் வளர்த்தெடுக்க வேண்டும் என்கின்ற கருத்துப்பட நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் உரையாற்றி சென்றனர்.

அவர்கள் கருத்துரையாற்றும் போது இவ்வாறான தமிழ் உணர்வுகள் தமிழ் சிந்தனைகள் தமிழருக்குரிய பாரம்பரிய விழுமியங்களை உள்ளடக்கிய தமிழர்களின் வரலாற்று ரீதியான, இதிகாச ரீதியான, புராண ரீதியான சமய சமூக வாழ்வோடு தொடர்புற்ற விடயங்களை உள்ளடக்கி காணப்படுகின்ற வசந்தம் கூத்தானது எமது பாரம்பரியத்தின் வரலாற்றை இக்கால சமூகத்திற்கு வெளிக்கொணருகின்ற கலை வடிவமாக காணப்படுவதாகவும் கருத்துரைத்தனர்.

இந்த கலை வடிவத்தினை மென்மேலும் அழிந்து செல்லாது கட்டிக் காக்க வேண்டும் என்கின்ற சிந்தனையோடு அவர்கள் கருத்துரை ஆற்றிய அமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வானது நூல் வெளியீடாக மட்டும் அமைந்திடாது ஒரு கலைக்கோளத்தை அரங்கேற்றுகின்ற கலை மேடையாகவும் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாழும் வசந்தன் நூலினை வெளியிட்ட தா.சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு மேடையிலே அமர்ந்திருந்த பேராசிரியர்களும் கல்விமான்களும் ஏனையவர்களும் வாத்து பாமாலை சொரிந்து இந்த அரிய முயற்சியினை பாராட்டியதோடு இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் இவ்வாறான கலை அம்சங்களை வெளிக்கொணர்ந்து தமிழர் பாரம்பரியத்தினை கட்டிக் காக்க வேண்டும் என தா.சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தமையும் விசேட அம்சமாக இடம்பெற்றது.

0-2304×4096-0-0#