ருத்திரன்
இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு மற்றும் திடப்படுத்தல் வழிபாடும் இன்று சனிக்கிழமை (02.08.2025) வாழைச்சேனை சேகர முகாமை குரு அருட்கலாநிதி,கே.எஸ்.நிசாந்த தலைமையில் நடைபெற்றது.
காலை 8.30. மணிக்கு திருமுழுக்கு வழிபாடு நடைபெற்று 9.00 மணிக்கு வாழைச்சேனை பிராதன வீதி வழியாக கலாச்சார நிகழ்வுகளுடன் கூடிய ஊர்வலப் பவனியும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆலய பிரதிஸ்டை வழிபாடும் நடைபெற்று பிரதம அதிதிகளால் திரை நீக்கம் செய்யப்பட்டது.பின்னர் ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.குறித்த மெதடிஸ்த திருச்சபையானது வழிபாட்டு நிகழ்வுகளுக்கு போதுமான இட வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்தனர்.அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மற்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பங்களிப்புடன் இவ் திருச்சபை புனர்நிர்மானம் செய்யப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருப்பேரவை தலைவர் அருட்பணி கிங்சிலி வீரசிங்க மற்றும் முன்னாள் திருப்பேரவைத் தலைவர் அருட்பணி டபிள்யு.பெநேசர் ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர்.கௌரவ அதிதியாக தென் கொரியாவைச் சேர்ந்த Rev. Eum Bum Chung கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவை தலைவர் அருட்பணி.சாம் சுபேந்திரன் மற்றும் மத்திய மறை மாவட்ட அவைத் தலைவர் அருட்பணி.ஞா.சதீஸ் அன்ரன் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


