(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
துபாயில் காலமான சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனியின் ஜனாஸா துபாய் அல்கைமா அல்யுலாப் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவரது மைத்துனரும் முன்னாள் அன்ஸார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தனது மனைவி சாகிதம் துபாயில் தனது மகளைப் பார்ப்பதற்கு சென்றிருந்த போது நோயுற்று எஸ்.ஐ. நாகூர் கனி காலமானார்.
அவரது ஜனாஸாவை துபாயில் நல்லடக்கம் செய்வதற்கு குடும்பத்தவர் தீர்மானித்ததையடுத்து 28ஆம் திகதி துபாய் அல்கைமா அல்யுலாப் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதேநேரம் கடந்த 29 ஆம் திகதி செவ்வாயன்று இஷாத் தொழுகையின் பின் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுல் நஜ்மியா பள்ளிவாசலில் மர்ஹும் நாகூர் ஹனிக்கான மறைவான ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.
பெருந்தொகையானவர்கள் இத்தொழுகையில் கலந்து கொண்டு, அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்தித்துள்ளனர்.


