ருத்திரன்
வாழைச்சேனை லயன்ஸ் (அரிமா) கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக லயன் ச.கார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் புதிதாக இணைந்து கொண்டவர்களை கௌரவிக்கும் முகமாக சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும்; வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகம் 306டி10 மாவட்டத்திற்கான கௌரவ ஆளுநர் க.லோகேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் பிராந்தியத் தலைவர்,வலயத் தலைவர் மற்றும் ஆளுநர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிர் நீத்த முன்னாள் லயன்ஸ் கழக வலயத் தலைவர் லயன் பா.நிரோசன் பிரதேச மக்களுக்கு கழகம் ஊடாக ஆற்றிய சேவை தொடர்பாகவும் மற்றும் வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தினை மீண்டும் திறன்பட செயற்பட வழியமைத்தமையை நினைவுபடுத்தி ஆளுநர் தமது உரையின் போது பாராட்டடையும் தெரிவித்தார்.
மாவட்டம் கடந்து பல்வேறுபட்ட புதிய செயல் திட்டங்களை எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ளதால் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.


