பாறுக் ஷிஹான்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத் தின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால், இவ்வாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னோடிக் கருத்தரங்கு இன்று (29) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, பிரதேச செயலாளர் எம்.எம்.ஆ சிக் அவர்களின் வழிகாட்டலில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் நெறிப்படுத்தலில் தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர், அல்-கமறூன் மற்றும் அல்- ஜலால் பாடசாலைகளில் புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சிரேஷ்ட ஆசிரியர் எம்.சி. ஜாபிர் மற்றும் பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்சில் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு தங்கள் மதிப்புமிக்க அறிவுரைகளையும் கற்பித்தல் வழிகாட்டல்களையும் வழங்கினர்.
மேலும் இதில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிபபாளர் றியாத் ஏ.மஜீத், திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, அபிவிருத்தி உத்தியோகத்தர் (CB0’s ) ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
110 மாணவர்கள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


