எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கி அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று முன் தினம் (25) இடம் பெற்றது.
நகர் பகுதியினை அழகுபடுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு புராதான ஒல்லாந்தர் கோட்டையை புணர் நிர்மானம் மேற்கொள்ளுதல், விமான நிலையத்தையும் பேருந்து நிலையத்டையும் இணைக்கும் வீதியினை அகளப்படுத்தல், மற்றும் நகர் பகுதியில் காணப்படும் களப்புபகுதியின் அருகில் கற்களினால் நடைபாதையினை அமைத்தல், வெள்ளப்பாதிப்பினை தடுப்பதற்கான செயற்திட்டங்கள், புதூர் புதிய வீதியை அமைத்தல், பல் அங்காடி நிலையத்தை நிறுவுதல் போன்ற பலவிடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் நகர் பகுதியில் காணப்படும் பாலங்களை புனர்நிர்மாணம் மேற்கொள்வதற்கான சாத்திய வள ஆய்வுகள் தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டது.
இவ் கலந்துரையாடலின் போது திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


