நூருல் ஹுதா உமர்
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடாத்தப்படும் முஹம்மதிய்யா ஹிப்ழு மதரஸா மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் குர்ஆனை மனனமிட்ட மாணவர்கள் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், மத்ரஸாவின் உஸ்தாத் அல்-ஹாபிழ் மௌலவி முஹம்மது தன்ஸீம் கௌஸி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.


