நீண்ட கால புனரமைக்கப்படாத வீதி குகதாதன் எம்.பி யால் அங்குரார்ப்பணம்

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். குறித்த பகுதியில் உள்ள வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமை காணப்பட்டது.
இவ் நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளை தம்பி சுரேஷ், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்