ஹஸ்பர் ஏ. எச்
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுடனான சந்திப்பு கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் கோரிக்கைக்கு அமைய கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் இசட். எம். எம். முனவ்வரா நளீம் அவர்களின் தலைமையில் இன்று (25) வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த ஒன்று கூடலில் பாடசாலைகளின் கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாகவும் சேதன உர உற்பத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதோடு எதிர்வரும் காலங்களில் சுயகற்றலை மேம்படுத்துவதன் ஊடாக ஆன்மீக ஒழுக்கம் உள்ள ஆரோக்கியமான கல்வி சமூகத்தை உருவாக்குவது சம்பந்தமாகவும் நகர சபைக்கும் கல்வி சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் வலய கல்வி பணிப்பாளர், நகரசபை தவிசாளர், பிரதி கல்வி பணிப்பாளர், நகர சபை பிரதி தவிசாளர் அதிபர்கள் பொது சுகாதார பரிசோதகர் என இதனோடு சம்மந்தப்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


