சமுர்த்தி சந்தைப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்படுத்திட்டம் – 2025 தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீளாய்வு கலந்துரையாடல் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தியிருந்தார்.

சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்பாட்டுத்திட்டத்தினை பிரதேச செயலக ரீதியாக எவ்வாறு திறம்பட முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட மேலும் பல செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாவு ஆகியோரினால் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான தெளிவு மற்றும் ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மீளாய்வு கலந்துரையாடலில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், சமூர்த்தி திணைக்கள உயரதிகாரிகள், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.