அரசாங்க அதிபருக்கும் விமானப்படை கட்டளை அதிகாரிக்குமிடையிலான விசேட சந்திப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விசேட சந்திப் பின்போது மாவட்டத்தில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளின் போதும் நோயுற்றுள்ள பொதுமக்களை அவசரமாக கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கும் விமானப்படையின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது என்பதை மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டிய வேளை, அவ்வாறான திடீர் அனர்த்த நிலமைகளின் போது தமது பூரண ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் தாம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன கடந்த மாதம் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.