சாய்ந்தமருது பழைய சந்தை வீதியில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது பழைய சந்தை வீதியின் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணி, மிக நீண்ட காலத்தின் பின்னர், பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமையவும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பெயரில் கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ நஜீம், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் ஆகியோரும் இவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இத்துப்பரவுப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை மாநகர ஆணையாளர், பொறியியலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.