ருத்திரன்
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப் பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன கலந்து கொண்டார்.
அவருடன் ஆலய குரு சிவஸ்ரீ ம.ரெஜானோ சர்மா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில அதிதிகள் வரவேற்கப்பட்டு; கலாச்சார ரீதியில் புதிய பானையில் பால் காச்சப்பட்டு இனிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் குடி மனை புகுவதற்கான விசேட பூசை நிகழ்வுகளுடன் சுப நேரத்தில் குடி மனை புகு விழா நடைபெற்றது.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தில் பிராச்சார நடவடிக்கைக்காக குறித்த மிராவோடை பகுதிக்கு சென்ற பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் யானையின் தாக்குதலுக்குள்ளாகி வீடு சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கல் வீடொன்று அற்ற நிலையில் காணப்பட்ட 2 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினரின் அவல நிலையை கண்டறிந்துள்ளார். அன்றாடம் மீன் பிடித் தொழில் ஈடுபடும் குடும்பஸ்தருக்கு புதிய வீட்டினை கட்டுவதற்கோ,வாழ்க்கை நடாத்துவதற்கோ போதியளவு வருமானம் இல்லாத நிலை காணப்பட்டது.
அத்துடன் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளம் கடும் காற்று வெப்பம் காரணமாக தற்காலிக கொட்டிலில் தமது பிள்ளைகளுடன் சிரமத்திற்கு மத்தியில் வாழ்வது என்பதும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.இந் நிலையில் அவர்களது வீடில்லா பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகிய பின்பு அக்கிராமத்திற்கு சென்று குறித்த குடும்பத்தினரின் நன்மை கருதி அவரது சொந்த நிதியில் இவ் வீட்டினை நிர்மானித்து மின்சார வசதியுடன் கூடிய வீட்டினை இன்றைய நாள் வழங்கியிருந்தார்.
இதன்போது தங்களுக்கு இவ் மனித நேய உதவியை வழங்கி சமூகத்தில் முன்மாதிரியாக செயற்பட்ட கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருக்கு குறித்த குடும்பத்தாரும் சமூக சேவை அமைப்புக்களும் பாராட்டுள்ளளை தெரிவித்தனர்.
0771607517. 21.07.2025.


