மாகாண மட்ட பெட்மின்டன் போட்டியில் வரலாற்று வெற்றியை தனதாக்கியது கல்முனை சாஹிரா

எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக் கிடையில் திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 15,16,17 ஆம் திகதிகளில் நடைபெற்ற பெட்மின்டன் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் 20 வயதுக்கு உட்பட்ட அணியினர் 1ஆம் இடத்தைப் பெற்று (Champion) தேசிய மட்ட பெட்மின்டன் போட்டிக்குத் தெரிவு செய்யப்படுள்ளனர்.

அத்துடன் மேற்படி பெட்மின்டன் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட அணியினர் 2ஆம் இடத்தைப் பெற்றும் ( Runners UP ) 16 வயதுக்கு உட்பட்ட அணியினர் 2ஆம் இடத்தைப் பெற்றும் ( Runners UP ) தேசிய மட்ட பெட்மின்டன் போட்டிக்குத் தெரிவு செய்யப்படுள்ளனர்.

இப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்களான ஏ.எம். அப்ராஜ் றிழா, எம்.எச்.எம். முதன்ஸிர் ஆகியோருக்கு மாகாண மட்டத்தில் சிறப்பாக விளையாடியது போன்று தேசிய மட்டத்திலும் வெற்றிபெற வேண்டுமென கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபீர் உட்பட பிரதி அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் சார்பான பாடசாலை சமூகம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.