அல் – ஹிலால் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தி விழா

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அல் – ஹிலால் விளையாட்டுக் கழகத்தின்
ஐம்பதாவது வருட பூர்த்தியை முன்னிட்டு பொன் விழா நிகழ்வு” குச்சவெளி இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இதில் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான ரகுமான் யூசூப், சமீம் ,இளைஞர் சேவைகள் அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த விளையாட்டுக் கழகம் இற்றை வரை திறம்பட செயற்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய “Diyan Hardware” உரிமையாளர் “TCA பஸ்மி காசிம், இணை அனுசரணை வழங்கிய “MS. ரினோஸ்” அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறனர்