எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ். ராஜ் பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் இன்று (18) ஆரம்பமாகியது.
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் 30 வருட நிறைவை முன்னிட்டு ” மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றது.
இதன் ஒர் அம்சமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்களுக்கான போட்டிகள் இதன் போது இடம் பெற்றது.
இப் போட்டிகளில் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவது மட்டுமல்லாது விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்காட்டும் களமாக இப் போட்டிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


