எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார குழு கூட்டம் சுகாதார குழு தலைவர் Dr.இலியாஸ் கருணாகரன் தலைமையில், சுகாதார குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன். மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டமானது மக்களுக்கான சுகாதார சேவைகளை மாநகரசபை எல்லைக்குள் திறம்பட வழங்கும் நோக்கில், பொதுமக்களிடம் இருந்து உறுப்பினர்களுக்கு கிடைக்க பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சிறப்பான சேவைகளை துரிதமாக வழங்கும் நோக்கில் சேவைகளை சரியாக நடைமுறைபடுத்த தடையாக இருக்கும் குறைபாடுகளை இனங்காண ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் சுகாதார பரிசோதகர்கள், கால்நடை வைத்தியர், சுகாதார மேற்பார்வையாளர்கள் அதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


