மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தல் – அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையின் கீழ் தொழில் நுட்ப ஆய்வு கூடத்தில் இன்று (17) இடம் பெற்றது.
மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகர்களை செயற்கை நுண்ணறிவினுடாக நிர்வாக மேம்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டது.
செயற்கை நுண்ணுறிவு தொடர்பாக ஐ. ஏப்.எஸ் நிறுவன அதிகாரி மனோகரராஜா விக்னராஜ் வளவடினார்.
மேலும் கிளவுட் (Cloud ) தொழில் நுட்பத்தினுடாக நிர்வாக செயற்பாட்டை மேம்படுத்தல் தொடர்பாக இதன் போது தெளிவட்டப்பட்டது.


