மட்டக்களப்பு மாநகர சபையின் 2வது மாதாந்த அமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் 2வது மாதாந்த அமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையின் சபா
மண்டபத்தில் இன்று 17.07.2025 திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

மாநகர முதல்வரின் வருகையினைத் தொடர்ந்து, மாநகர கீதம் இசைக்கப்பட்டு மாநகர சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் சபை அமர்வுகள் இடம்பெற்றது.

இதன் போது மாநகர சபையின் கடந்த சபை அமர்விற்கான அறிக்கைக்கை திருத்தத்துடன், முன்மொழிந்து வழிமொழியப்பட்டதுடன், சபையின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு இதன் போது பல மக்கள் சார்ந்த விடையங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சபையின் அனுமதி வழங்கப்பட்டதுடன், சில விடையங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக குழு நிலை விவாதம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.