சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சம்மாந்துறைக்கு விஜயம்

பாறுக் ஷிஹான்

இலங்கையில் வறுமை ஒழிப்புக்காக 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், அரநெளு கடன் உதவி வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில்திங்கட்கிழமை(14) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சி.டி களுஆராச்சி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் முகாமையாளர் எம்.ஜி.எஸ்.எஸ் கிட்சிறி,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹூசைன்,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம் நவாஸ், சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி சமுதாய அமைப்பு தலைவர்கள்,மாணவர்கள் என பலரும் கல்ந்து கொண்டனர்.