ரஷ்யாவுக்கு எதிராக ட்ரம்ப் மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்!

ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராட உதவும் வகையில், அமெரிக்கா உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த அமைப்புகளை நேட்டோவிற்கு அனுப்பும் என்றும், பின்னர் அவற்றை உக்ரைனுக்கு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர் நிறுத்த கலந்துரையாடலை நடத்தும் ட்ரம்பின் முயற்சிகளை ரஷ்ய ஜனாதிபதி எதிர்த்ததால் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.