தெரிவு செய்யப்பட்ட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு

( வாஸ் கூஞ்ஞ) 10.07.2025

மன்னார் பிரதேச சபைக்கு 2025 ஆம் ஆண்டு மூன்றாவது அவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 22 உறுப்பினர்களுக்கும் வரவேற்பு மன்னார் பிரதேச சபை அலுவலக அதிகாரிகள் ஊழியர்களால் அளிக்கப்பட்டது.

புதன்கிழமை (09.07.2025) நடைபெற்ற இந்நிகழ்வு மன்னார் பிரதேச சபை செயலாளர் தலைமையில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் நடாத்தப்பட்டது.

காட்டாஸ்பத்திரி பள்ளிவாசல் பகுதியிலிருந்து இவர்களை பேண்ட் வாத்திய இசைகளுடன் மன்னார் பிரதேச சபை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுர்தீன் அவர்களும் மற்றும் பெரிய கரிசல் தொழிலதிபர் எஸ் . கே . பி அலாவுதீன் தொழிலதிபர் அசோக் அமானி பம்பாய் ஜூவல்லரி உரிமையாளர் புர்காதீன் ஆகியோருடன் முன்னாள் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் கரிசல் நபில் ஹாஜியார் கரிசல் பள்ளி நிர்வாகம் காட்டாஸ்பத்திரி பள்ளி நிர்வாகம் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்து , முஸ்லீம் மற்றும் பௌத்தம் ஆகிய மும்மதத் தலைவர்களும் கலந்து கொண்டு இவர்களுக்கான ஆசீயுரைகளை வழங்கினர்.